ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் இணைக்கும் நோக்கில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள முன்னணி ஹோட்டல்களில் ஒன்றான சினமன் க்ரான்ட் சியர்ஸ் பப் பகுதியில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தின் பின்னர் எழுந்துள்ள சர்ச்சைகளை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, அமைச்சர்களான சந்திம வீரக்கொடி, லசந்த அழகியவன்ன, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் மஹிந்த ராஜபக்ஸவின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சதி வலையில் சிக்கிவிடக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது