138
ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் சாரதிகள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று இலங்கை புகையிரத சேவை கூறியுள்ளது.
இன்றைய தினம் பணிக்கு சமூகமளிக்காத ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான சாரதிகள் பணியிலிருந்து
நீங்கியதாக கருதப்படுவர் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதல் புகையிரதங்கள் போக்குவரத்தில் ஈடுபடாது என்று லோகோமோட்டிவ் பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
Spread the love