157
பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர கூட்டு எதிர்க்கட்சியிலிருந்து விலகியுள்ளார். இனி வரும் காலங்களில் தாம் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து செயற்பட போவதில்லை என அறிவித்துள்ளார்.
இன்று முதல் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகளிலிருந்து சற்றே விலகியிருப்பதாக அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் இதன் மூலம் தாம் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் எதிர்வரும் காலங்களிலும் மாத்தறை மாவட்ட மக்களுக்காக தாம் சேவையாற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love