நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரவிற்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் காவல்துறை மா அதிபரும், சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தொடர்ச்சியாக பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் செய்யப்பட்ட முறைப்பாடுகள் காரணமாக இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. சுமார் 15 நாட்களில் இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.