பாராளுமன்றில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவிற்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் விமல் வீரவன்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக அமைச்சர் சமரவீர குற்றம் சுமத்தியிருந்தார். விமல்வீரவன்ச தனது மகனை அரசாங்க செலவில் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதன் போது இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது எனவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்த விமல் வீரவன்ச பிள்ளைகள் இல்லாதவர் என்பதனால் இவ்வாறு போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும் பிள்ளைகள் பற்றி தெரியாதவர் எனவும் மங்கள மீது குற்றம் சுமத்தியுள்ளார்.