முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு சொல்ல வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் உள்ளுராட்சி மன்ற அமைப்பின் அழைப்பாளர் குணசிறி ஜயனாத் தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரை வீதியில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழித்த புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். யுத்தத்தை இல்லாதொழித்த தலைவர் என்ற ரீதியில் கூடுதல் அச்சுறுத்தல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கே காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவி;ற்கு வழங்கப்பட்ட பிரபுக்கள் பாதுகாப்பு நீக்கப்பட்டமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ள அவர் மஹிந்தவிற்கு மீளவும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.