171
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று நடத்திய தொழிற்சங்கப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாகவும் இந்தப் போராட்டங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தரப்பினர் பணியில் ஈடுபடவில்லை என்ற போதிலும் பெரும்பான்மையானவர்கள் பணியில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
Spread the love