வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த இடமளிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சில வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த முயற்சிக்கின்றனர் என குற்றம் சுமத்தியுள்ள அவர் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் ஈடுபட கிடைத்தமை ஓர் புனிதமான தருணம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தருணத்தை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது என குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றிய அமரர் லக்ஸ்மன் கதிர்காமரின் முயற்சியினால் சர்வதேச வெசாக் பௌர்ணமி தினத்தை அனுஸ்டிக்க சந்தர்ப்பம் கிட்டியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.