உலகில் தாய்சேய் நலன்களைப் பேணிப்பாதுகாக்க உதவும் குடும்பல நலமாதுக்களின் சேவைக்கு மதிப்பளிக்கும் நோக்கில் 1992ம் வருடத்திலிருந்து வருடா வருடம் வைகாசி மாதம் 5ம்திகதி அன்று சர்வதேச குடும்பநல மாதுக்கள்தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.
இதற்கமைய நேற்றைய தினம் (05.05.2017) கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரவைத்திய அதிகாரிகளின் ஒழுங்கமைப்பில் கரைச்சி பொதுச்சுகாதார தாதிய உத்தியோகத்தரது நெறிப்படுத்தலில் சர்வதேச குடும்ப நலமாதுக்கள் தினம் கிளிநொச்சி பழைய வைத்தியசாலை மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணர் வைத்திய கலாநிதி பாபு அவர்கள் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சேவையாற்றும் குடும்ப நலமாதுக்கள் மாவட்டத்தில் சேவையாற்றி ஓய்வுபெற்ற மற்றும் மாவட்டத்தில் சேவையாற்றி இடமாற்றம்பெற்றுச் சென்ற குடும்பநலமாதுக்கள் என ஐம்பதிற்கு மேற்பட்ட குடும்ப நலமாதுக்கள் கலந்து சிறப்பித்தனர்
நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலன் கடந்த 2016ம் ஆண்டு தமது சேவைகளைத் திறம்பட வழங்கிய குடும்ப நலமருத்துவமாதுக்கள் சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
இந்த வகையில் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்-திருமதிசந்திரகலாஇ திருமதிஇசுமங்கலி, திருமதி வளர்மதி ஆகிய குடும்ப நலமாதுக்களும்: கண்டாவளை சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில்-திருமதி அமிர்தசுலோச்சனா, திருமதி லோறன்ஸ்பவுல்மேரி,அனற்றி, திருமதி கவிதா ஆகியஇகுடும்பலநலமாதுக்களும் பூனகரி சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில்- செல்வி சுஜீபா , திருமதி அருள்நிதிஇ திருமதி கவிதாசாந்தமூர்த்தி ஆகிய குடும்ப நலமாதுக்களும்: பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்-திருமதி வசந்தமதி, திருமதி சிவலோஜினி, திருமதி ஜெயபோதினி ஆகிய குடும்ப நலமாதுக்களும் சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.