இலங்கையில் உள்ள முதலமைச்சர்களில் தகுதி கூடிய முதலமைச்சர் என்றால் அது வடக்கு முதலமைச்சர்தான். அது அனைவருக்கும் தெரியும். அண்மையில் கல்வி அமைச்சருடன் வட மேல் மாகாணத்தில் வயம்ப எனும் இடத்தில் கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு குறிப்பிட்டுள்ளார்கள் அந்த முதலமைச்சர் எட்டாம் ஆண்டுதான் படித்தவர் என்று. ஆனால் அவர் அந்த மாகாணத்தை சிறப்பாக கொண்டு நடத்துகின்றார் இதற்கு தகுதி அல்ல முக்கியம் ஆளுமைதான் காரணம் அவரிடம் ஆளுமை இருக்கிறது. இதனை பல இடங்களில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதுமாதிரிதான் வடக்கு கல்வி அமைச்சரும் அவர் ஆசிரியராக அதிபராக வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்து கல்வி அமைச்சராக வந்தவர் என்பது முக்கியமல்ல அவரது ஆளுமைதான் முக்கியமானது என வடக்கு மாகாண எதிர் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை கிளிநொச்சி ஊடக அமையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில
வடக்கின் கல்வித்துறையில் வளங்கள் சரியாக பகிரப்படாமை, சரியாக பயன்படுத்தப்படாமை, மற்றும் நெறிப்படுத்தப்படாமை போன்ற காரணங்களால் கல்வித்துறை என்றுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது;
வடக்கின் கல்வி வீழ்ச்சி தொடர்பாக ஆரம்பத்தில் என்னால் கேள்வி எழுப்பிய போது அப்போது கூறப்பட்டது பழைய வடக்கு ஆளுநர் மற்றும் பழைய மகிந்த அரசையும் அந்த அரசுக்கு ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகளையும் குறை சொல்லியதோடு, அவர்களின் தலையீடும் காரணம் என்று சொல்;லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு மூன்றரை வருடங்கள் கடந்த நிலையிலும் வடக்கு மாகாணம் இன்றைக்கும் கல்வியில் கீழ் நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயம். என்னைப் பொருத்தவரை இதற்கான முழுப்பொறுப்பையும் வடக்கு மாகாண சபைதான் ஏற்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை ஆசிரியர் வளங்கள் உள்ளிட்ட கல்வித்துறையின் வளங்கள் சரியாக முறையாக பங்கிடப்படவில்லை, இலங்கையில் ஆசிரியர் மாணவர் விகிதாசார நியமம் 18 க்கு ஒன்றாக இருக்க வேண்டும் ஆனால் வடக்கில் 16 க்கு ஒன்றாக காணப்படுகிறது. எனவே வளங்கள் அதிகமாக இருக்கிறது. ஆனால் அந்த வளங்களை சரியாக பயன்படுத்தவோ, பங்கிடவோ, நெறிப்படுத்தவோ முடியாத வினைத்திறனற்ற நிர்வாகமே காணப்படுகிறது. இதனாலேயே இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக ஒரு சில வலயங்களில் கல்வித்துறையின் ஆளணி வளம் குவிக்கப்பட்டுள்ளது. எத்தனையோ தடவைகள் எடுத்துக் கூறியும் அது சீர்செய்யப்படவில்லை. அதற்கு மேலதிகமாக இந்தக் குறைபாடுகளை நீக்குவதற்காகதான் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்கள் குறிப்பாக வன்னி பிரதேசங்களில் நியமிக்கவே முன்னுரிமை அளிக்கப்பட்டது. குறிப்பாக நானூறு பேரளவில் யாழ்ப்பாணத்திற்கு வெளியே நியமிக்கப்பட்டார்கள் அதில் ஜம்பது பேர் ஒத்து இடமாறுதல் மூலம் மீண்டும் யாழப்பாணத்திற்கு வந்திருக்கின்றார்கள். ஆனால் 75 பேர் அரசியல்வாதிகளின் சிபார்சு மற்றும் உயர்மட்ட செல்வாகின் அடிப்படையிலும் யாழப்பாணத்திற்கு வந்துவிட்டார்கள் இதில் எந்தெந்த அரசியல்வாதிகள் ஈடுப்பட்டுள்ளனர் என்ற ஆதாரமும் என்னிடமும் உண்டு
வளங்களை சரியாக நெறிப்படுத்தி அதற்கான அளுமையான தலைமைத்துவத்தை வழங்கி வினைத்திறனான செயற்பாடுகளை கொண்டு நடத்தவே அரசியல் தலைமைத்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. வடக்கிலும் முதலமைச்சர் அமைச்சர்கள் அவர்களுக்கு சம்பளங்கள் சலுகைகள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களுக்கு சம்பளம் என வழங்கி வருவது ஏன் மக்களுக்கு வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்தற்காகவே ஆனால் அது எதுவும் நடந்ததாக தெரியவில்லை என வடக்கு மாகாண எதிர்க் கட்சி தலைவர் தவராசா தெரிவித்தார்.