ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகப் போவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராக பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டால் தாம், கட்சியின் உறுப்புரிமையிலிருந்து விலகிக் கொள்ள நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதவியில் சரத் பொன்சேகாவை அமர்த்தக் கூடாது எனவும் நெருக்கடியான தருணத்தில் தாம் கட்சியில் இணைந்து கொண்டு சேவையாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் சரத் பொன்சேகாவிற்கும், விஜயதாச ராஜபக்ஸவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சரத் பொன்சேகாவிற்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்படுவதனை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவும் எதிர்த்துள்ளார்.