168
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் காவல்துறையினர் ஒருவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து, காவல்துறையினர் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரி, தீவிரவாதி என மொத்தம் நான்கு பேர் உயிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணியில் இருந்த மூன்று காவல்துறையினர் கடுமையாக காயமுற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love