157
போலி செய்திகளை வெளியிடும் இணைய தளங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன கோரிக்கை விடுத்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இணைய தளங்களை பயன்படுத்தி போலி செய்திகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர். அண்மையில் சுகாதார உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில், ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இலங்கையில் எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரப்பப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love