கர்நாடகாவில் ஆடம்பர திருமணங்களுக்கு தடை விதிக்கப்படுமென முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருமண செலவு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் அதை கருத்தில் கொண்டு கர்நாடகத்தில் ஆடம்பர திருமணங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற முடிவை அரசு எடுத்து உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்கு தேவையான செலவுகளை குறைத்து ஆடம்பரத்தை முற்றிலும் நீக்கிட வேண்டும் எனவும் கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு மாநில அரசின் சார்பில் 3 லட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது எனவும் சாதி வேறுபாடுகளை களைய வேண்டும் என்பதற்காகவும், கலப்பு திருமணம் செய்வோர்களின் வாழ்க்கைக்கு உதவி செய்வதற்காகவும் இந்த நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.