139
அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்னவை பணி நீக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்கள் இன்றைய தினம் கோர உள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது ராஜிதவை, அமைச்சரவை பேச்சாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமேன கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
Spread the love