தென் சூடான் யுத்தம் காரணமாக 2 மில்லியன் பிள்ளைகள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. சிவில் யுத்தம் காரணமாக இரண்டு மில்லியன் சிறுவர் சிறுமியர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் பெருந்தொiகாயன சிறுவர் சிறுமியர் பட்டினிப் பிணியால் வாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வேறு நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்த மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த சிறுவர் சிறுமியரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் சூடானில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 3.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் சுமார் ஒரு லட்சம் பேர் பட்டினிப் பிணியால் வாடி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.