கொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுக் செல்வோருக்கு நல்ல செய்தி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோரிடமிருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் 500,000 ரூபா அறவீடு செய்யத் திட்டமிட்டிருந்தது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரளவின் உத்தரவிற்கு அமைய இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பிணைத் தொகையாக ஐந்து லட்சம் ரூபா செலுத்த வேண்டுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது எனினும், தற்போது அந்த தொகையை அறவீடு செய்யாமலேயே வேலை வாய்ப்பு பெற்றுச்செல்ல சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 26000 பேர் கொரியாவில் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.