யேமனில் கொலரா நோயினால் 34 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 9 மாகாணங்களில் 2,022 பேர் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கடந்த ஏப்ரல் 27 முதல் மே 7 வரை காலப்பகுதியில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதென உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனம் இது தொடர்பிலான தகவல்கள் விபரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த நிலைமை ஆபத்தானது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் யேமனுக்கான பதில் பிரதிநிதி Nevio Zagaria தெரிவித்துள்ளார். கடந்த ஒக்ரோபர்மா தத்திலும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொலரா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிர் இழப்புக்கள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.