185
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 550 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைத் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. பாரிய குற்றசச் செயல்கள் காரணமாக தண்டிக்கப்படாத கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் பரிந்துரைக்கு அமைய கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். வயது, நடத்தை, குற்றத்தின் தன்மை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
Spread the love