அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐயின் இயக்குநரான ஜேம்ஸ் கோமியை அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் ரம்ப் பதவிநீக்கம் செய்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலின் போது ரஸ்யாவின் தொடர்பு பற்றி கோமி விசாரணை நடத்தி வந்தார். விசாரணை வேகமாக நகர்ந்து கொண்டிருந்த நிலையில், கோமி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் வெளியுறவு செயலராக ஹிலரி கிளிண்டன் பணியாற்றிய போது சில ரகசிய தகவல்களை அவர் கையாண்ட விதம் குறித்து விசாரணை நடத்தி வந்த ஜேம்ஸ் கோமி இது குறித்து தவறான தகவல்களை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக தெரிவித்தே இந்நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.