சுமார் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு பிரயோகிக்கப்பட்ட சட்டம் ஏனைய இரட்டைக் குடியுரிமை உடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் ஊடாக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயங்கள் தொடர்பிலான சகல தகவல்களும் திரட்டப்பட்டதன் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.