169
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் எதிலும் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச வெசாக் பௌர்ணமி தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இன்றைய தினம் மாலை இந்திய பிரதமர் இலங்கைக்கு வரவுள்ளார்.
மோடியின் இலங்கைப் பயணத்தின் போது உத்தியோகபூர்வ அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தப்படாது என இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் சஞ்சய் பான்டா இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இலங்கையின் அரச தலைவர்களுடன் சந்திப்பு நடத்துவார் என தெரிவித்துள்ளார்.
Spread the love