முத்தலாக் முறை பாலின சமத்துவத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் விவகாரம் தொடர்பான வழக்குகள் இன்றையதினம் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணையின் போது, முத்தலாக் முறை பாலின சமத்துவத்துக்கு எதிரானது என தெரிவித்த மத்திய அரசு பெண்களின் சமத்துவம் மற்றும் பாலின சமூக நீதிக்காக போராட விரும்புவதாகவும் தெரிவித்தது.
விசாரணையின் போது. அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் முன்னிலையான கபில் சிபல் வாதிடுகையில் முத்தலாக் விவகாரம் இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரம் எனவும் உச்சநீதிமன்றம்இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.