171
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றிலையே நடைபெற வேண்டும் என கோரி மாணவியின் தாய் உட்பட புங்குடுதீவு மக்கள் போராட்டம் ஒன்றினை வியாழக்கிழமை மாலை முன்னெடுத்து இருந்தனர்.
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கை கொழும்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. என தகவல்கள் வெளியாகியதை அடுத்து , இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டு உள்ளது.
மாணவியின் கொலை வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட கூடாது அந்த வழக்கு யாழ்ப்பானத்திலையே நடைபெறவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Spread the love