159
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்துள்ள நரேந்திர மோடியை, நேற்றைய தினம் இரவு மஹிந்த சந்தித்துள்ளார்.
இதன்போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து மகிழ்ச்சி அடைவதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு அமைய மோடி இந்த சந்திப்பினை மேற்கொண்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக மோடி தம்மிடம் கூறியதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.
Spread the love