192
கனடா நாடு கடத்தும் உத்தரவினை பிறப்பித்தால் அதனை எதிர்க்கப் போவதில்லை என இலங்கையரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார். மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சிவலோகநாதனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்காக கனடாவில் தண்டனை அனுபவிப்பதனை விடவும், இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதனை சிவலோநாதன் விரும்புவதாக கனேடிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
31 வயதான சிவலோகநாதன் கடனாவில் புகலிடம் கோரியிருந்த நிலையில் அவருக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மனைவியை கொலை செய்ததாக சிவலோகநாதன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love