இந்திய அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்றையதினம் திறந்துவைத்துள்ளார். இந்திய பிரதமருடன், ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்டோரும் இணைந்து குறித்த வைத்தியசாலையை திறந்துவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்ததோடு, ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். ஹட்டன் – நோர்வூட் மைதானத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்படி வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
மேலும் அங்கு உரையாறற்றிய இந்தியபிரதமர் நரேந்திரமோடி உரிமைக்காக போராடிய மக்களை மறக்க மாட்டோம் எனவும் மலையக மக்களுக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார். தமிழ்தாயின் பிள்ளைகள் பழமையான தமிழ் பேசுவதில் பெருமை எனத் தெரிவித்த அவர் இந்திய, இலங்கை அரசுகளுக்கு இணைப்பாக மலையக மக்கள் விளங்குகின்றனர் எனவும் தெரிவித்தார்.