அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். செயற்பாட்டு அரசியலில் களமிறங்கும் திட்டங்கள் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் கோதபாய அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யப் போவதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
தமது மகன் உள்ளிட்ட பல உறவினர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும் இதனால் அடிக்கடி அமெரிக்கா சென்று வர வேண்டியிருப்பதாகவும் அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள எவ்வித அவசியமும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்து கொள்ள வேண்டுமாயின் தூதரகத்திற்கு ஓர் கோரிக்கையை முன்வைத்து சில வாரங்களில் அதனை செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.