206
சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. புதிய அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என சுதந்திரக் கட்சியின் , அரசியல் சாசனம் குறித்த செயற்குழு தீர்மானித்துள்ளது.
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய வகையிலான திருத்தங்கள் அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளது. அனைத்து கட்சிகளினாலும் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட முன்னதாக சுதந்திரக் கட்சியின் அரசியல் சாசன செயற்பாட்டுக்குழு தனது தீர்மானத்தை முன்மொழிய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love