158
இலங்கையுடனான இராணுவ உறவுகளில் விரிசல் கிடையாது என சீனா தெரிவித்துள்ளது. சீன நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் தரித்து நிற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இவ்வாறு சீனா கருத்து வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராணுவ உறவுகள் பிராந்திய வலயத்தின் சமாதானத்தை வலுவடையச் செய்யும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சீன இலங்கை உறவுகளினால் ஏனைய நாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை சுட்டிக்காட்டியுள்ளது.
Spread the love