ஐக்கிய தேசியக் கட்சியுடனான உடன்படிக்கையை ரத்து செய்யுமாறு ஒரு தொகுதி சுதந்திரக் கட்சி உறுப்பினர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் தொகுதியில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கைச்சாத்திட்டிருந்த புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பூர்த்தியாக உள்ளது. இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையையே நீடிக்கப்படக் கூடாது என சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2015ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.