மாகாணசபைகளை சீர்குலைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரும்பவில்லை என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் நிர்வாகம் செய்யப்படும் மாகாணசபைகளை சீர்குலைப்பதற்கு மஹிந்த விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கடைநிலை உறுப்பினர்களே இவ்வாறு மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைக்க விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் இதயத்துடிப்பினை தாம் அறிவதாகவும் மஹிந்த ராஜபக்ஸ எல்லாக் காலங்களிலும் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழ் உள்ள மாகாணசபைகளின் முதலமைச்சர்களை நிர்ணயிக்கும் அதிகாரம் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரையே சாரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.