இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மீளாய்வு செய்ய உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்த மீளாய்வு செய்யப்பட உள்ளது. புருண்டி, கொரியா மறும் பொலிவியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
மனித உரிமையை மேம்படுத்துவதற்கு நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த அகில கால மீளாய்வு முறைமை பயன்படுத்தப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் இந்த அகில கால மீளாய்வு பொறிமுறைமைக்கு உட்படும் என்பது குறிப்பிடத்தக்கது.