கடந்த 2 தினங்களாக இணையத்தள தாக்குதலகள் காரணமாக 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் மருத்துவம், தொலைத்தொடர்பு உட்பட முக்கிய துறைகளின் கணினிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் ஆந்திர மாநில காவல் துறைக்கு சொந்தமான கணினிகளும் முடக்கப்பட்டுள்ளன.
திருப்பதி, சித்தூர், கலிகிரி, திருச்சானூர் உட்பட் 9 காவல் நிலையங்களில் உள்ள கணினிகள் முடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, விசாகப்பட்டினம், காகுளம், குண்டூர், விஜயவாடா ஆகிய பகுதிகளில் உள்ள பல காவல் நிலையங்களிலும் கணினிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இணைய தகவல் பரிமாற்றம் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கணினியில் உள்ள தகவல்கள் பாதிக்கப்படவில்லை எனவும் விரைவில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் ஆந்திர மாநில காவல்துறைமாஅதிபர் தெரிவித்துள்ளார்.