165
கறுப்பு கொடி பறக்க விடுவதாக அறிவித்தவர்கள் அற்றிரவே நரேந்திர மோடியை சந்தித்தனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரலகங்விலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இன்றைய தினம் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மஹிந்த ராஜபக்ஸ சந்திக்க தாமே அனுமதி வழங்கியதாகத் தெரிவித்துள்ளதாகவும் இந்த சந்திப்பிற்கான அனுமதியை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்திய பிரதமரின் இலங்கைப் பயணத்தின் போது எந்தவொரு அரச சொத்துக்களும் இந்தியாவிற்கு தாரை வார்க்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love