174
நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலை அரசாங்கத்தினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வித செலவும் இன்றி தனியார் வைத்தியசாலையை அரசாங்கத்திற்கு வழங்க மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி இணங்கியுள்ளது என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த தனியார் வைத்தியசாலை இனி அரசாங்க வைத்தியசாலையாகவே இயங்கும் எனத் தெரிவித்துள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களைப் போன்றே ஏனைய மாணவர்களும் இங்கு பயிற்சி மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love