187
வவுனியாவில் இன்று பிற்பகல் ஏற்பட்ட புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். வவுனியாவிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரதத்துடன் உழவு இயந்திரம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
புகையிரதம் வவுனியா புத்தூர் சந்திக்கு அருகிலுள்ள புகையிரதக் கடவையை, மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் கடக்க முற்பட்டவேளை புகையிரதத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக உழவு இயந்திரத்தில் சென்ற புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love