எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய கிளை இதனை அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி துன்-லாய் மார்க் (Tung-Lai Margue ) இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு எதனையும் வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்குவது குறித்த ஆவணம் வியாழக்கிழமை அச்சிடப்படும் எனவும், வெள்ளிக்கிழமை முதல் இந்தச் வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.