மெக்சிகோவில் விருது பெற்ற பத்திரிகையாளரான ஜேவியர் வால்டெஸ் (Javier Valdez) என்பவர் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இனந்தெரியாதோர் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
மெக்சிகோவின் சினலோவா மாகாணத்தில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றசம்பவங்கள் குறித்து செய்திகள் சேகரித்து வழங்கி வந்தமைக்காக பத்திரிகையாளர் ஜேவியர் வால்டெஸ்சுக்கு கடந்த 2011-ம் ஆண்டு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு ஆணையகம், சர்வதேச பத்திரிகை சுதந்திர விருதினை வழங்கியிருந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் சினலோவா மாகாணத்தின் தலைநகர் குலியகானில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இனந்தெரியாதோர் அவரை சுட்டுக்கொலை செய்துள்ளனர். அங்கு சமீபகாலத்தில் படுகொலை செய்யப்பட்ட 5-வது பத்திரிகையாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.