ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 25ம்திகதியுடன் முடிவடைகின்ற நிலையில் புதிய ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சோனியா காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார் எனவும் சுமார் 40 நிமிடங்கள் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தி யாளர்களிடம் கருத்து தெரிவித்த மம்தா ஜனாதிபதி; தேர்தலுக்காக யாருடைய பெயரையும் தாங்கள் விவாதிக்கவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்படுவதன் அவசியம் குறித்து பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.