முள்ளிவாய்க்கள் தேவாலயம் ஒன்றிற்கு அருகில்; இன்று நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையை வன்மையாக கண்டிப்பதோடு, குறித்த தீர்ப்பிற்கு எதிராக இலங்கையின் சகல மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அணிதிரள வேண்டுமென உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா அழைப்பு விடுத்துள்ளார்.
பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கள் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் இன்று மேற்கொள்ளவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த தடை உத்தரவில் சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைவாக முள்ளிவாய்க்கால் கிழக்கு கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில் நினைவேந்தல் செய்வதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படும் எனக்கருதி பாதிரியார் இராயேந்திரன் எழில்ராயன் உட்;பட அனைவருக்கும் குற்றவியல் நடைமுறைக் கோவை பிரிவு 106 இற்கு இணக்க பதின் நான்கு நாட்களுக்கான இடைக்கால தடை உத்தரவை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் வித்திப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இறந்த தமது உறவுகளை நினைவுகூருவது அடிப்படை உரிமையாக இருக்கின்றபோது, அது எவ்வாறு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமென சூக்கா கேள்வியெழுப்பியுள்ளார்.