பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கள் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது
இதனையடுத்து இன்று காலை முள்ளிவாய்க்கால் கிழக்கில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலய சூழலில் பல இடங்களில் நீதி மன்ற தடையுத்தரவை பொலீஸார் பல இடங்களில் ஒட்டியுள்ளதோடு , ஒலிபெருக்கி மூலம் நினைவேந்தல் நிகழ்வை நடத்த வேண்டாம் என்றும் அவ்வாறு நடத்தப்பட்டால் கைதுசெய்யப்படுவீர்கள் என்றும் அறிவிப்பிலும் ஈடுப்பட்டனர்.
குறித்த இடத்திலே ஏற்ப்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் வைத்து நினைவேந்தல் செய்வதறகு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் அங்கு கற்களில் பொறிக்கப்பட்ட பெயர்கள் யாருடையது என்பது பற்றி அறிந்து கொள்ள முடியாத காரணத்தினால் அந்த நிகழ்வு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும் அமைத்திக்கும் பங்கம் ஏற்படாலாம் என சந்தேகித்து முல்லைத்தீவு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடைக்கால தடை உத்தரவிற்கு பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது