நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டின் போது ஊழல் மேற்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தாவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
குப்தாவோடு சேர்ந்து கோர்பா, சாமாரியா ஆகிய இரண்டு நிலக்கரி துறை முன்னாள் அதிகாரிகளும் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர்களையும் சிபிஐ நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இவ்வாறு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் தண்டனை குறித்த விவரங்கள் எதிர்வரும் மே 22ம் திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இதேவேளை இந்த வழக்கில் தொடர்புடையவராக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த ஒடிட்டர் அமித் கோயலை நீதிமன்றம் விடுவித்துள்ளது. மேலும் முறைகேடாக நிலக்கரி உரிமம் பெற முயற்சித்ததாக கேஎஸ்எஸ்பிஎல் நிறுவனத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளும் இந்த வழக்கில் தண்டனை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.