அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை நிலையில் உத்தேச அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற மூடிய கதவு கூட்டத்தின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் அமைச்சரவை மாற்றம் செய்வது அத்தியாவசியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவ்வாறாயின் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்யப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத காரணத்தினால் எதிர்வரும் திங்கட்கிழமை மீளுவும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சுப் பதவிகளில் பாரிய மாற்றம் செய்யப்படாது என தெரிவிக்கப்படுகிறது.