காலாவதியான கண்ணீர் புகைக் குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 17ம் திகதி மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, போராட்டத்தைக் கலைப்பதற்கு காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டை பயன்படுத்தினர்.
இதற்காக பயன்படுத்தப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகள் காலாவதியானவை என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 2004ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகளே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கண்ணீர் புகைக் குண்டுகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது எனவும், இவ்வாறு காலாவதியான குண்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கம் எம்மை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.