157
போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதான பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கடந்த 17ம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். இதன்போது கைது செய்யப்பட்ட எட்டு மாணவர்களுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மாணவர் பிக்கு ஒருவரும் உள்ளடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு லட்சம் ரூபா சரீர பிணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.
Spread the love