யாழ் பல்கலைகழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் இன்று(18) மாணவர்களால் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எட்டாம் ஆண்டு நிகழ்வு மாணவர்களால் நினைவு கூறப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது தங்களது உறவுகளை இழந்த பல மாணவர்கள் ஒன்று சேர்ந்து நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்துள்ளனர். இதில் விவசாயபீடம் , பொறியியல் பீடம் மற்றும் தொழிநுட்ப பீட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த நிகழ்வு அமைதியான முறையில் இடம்பெற்றது.
இந்த நிலையில் கிளிநொச்சி தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மையின மாணவர்கள் மாத்திரம் தாங்கள் இன்று வெற்றி விழா கொண்டாடப் போவதாகவும் எனவே கறுப்புக் கொடிகளை அகற்றிவிடுமாறும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதற்கு தமிழ் மாணவர்கள் மறுப்புத் தெரிவித்த நிலையில் பெரும்பான்மையின தொழிநுட்ப பீட மாணவர்கள் தொழிநுட்ப பீடத்திலிருந்து விவசாய பீடம் வரை தேசியக் கொடியுடன் ஆடிப்பாடி வந்த மாணவர்கள் விவசாய பீடத்திற்கு முன் தேசியக் கொடியை ஏற்றி தேசிய கீதத்தை பாடி வெற்றி விழா நிகழ்வை கொண்டாடியுள்ளனர்.