ஜனாதிபதிமக்கள் சேவை ( நிலமெஹெவர)நடமாடும் சேவை முல்லைத்தீவு மாவட்டத்தில் , 22.05.2017 திங்கட்கிழமை காலை 8.00 தொடக்கம் மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ளது. இவ் நடமாடும் சேவையில் கீழ்குறிப்பிட்டசேவைகளைபொதுமக்கள் பெற்றுக்கொள்ளமுடியுமென பிரதேசசெயலாளர் அறியத்தந்துள்ளார்.
தேசியஅடையாளஅட்டை,பிறப்பு,விவாக உத்தேச வயது சான்றிதழ்கள்,வாகனசாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ அறிக்கை, பரீட்சை நடாத்துததல்,மற்றும் மோட்டார் வாகனத் திணைக்களத்தின் ஏனைய சேவைகள்,முதியோர் அடையாள அட்டை, (சிறுநீரக நோய்,புற்றுநோய்,தலைசீமா,தொழுநோய்,காசநோய்) ஆகியவற்றுக்கான நோய்க்கொ டுப்பனவு விண்ணப்பம்,தற்செயல் நிவாரணக் கொடுப்பனவு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல்,இலவச மூக்குக்கண்ணாடிவழங்கல்.தேசியவீடமைப்புஅதிகாரசபையின் கடன் தொடர்பானஆலோசனை,முதியோர் அடையாளஅட்டை,வங்கிக் கடன் சேவை,பொதுவானவைத்தியசேவைகள், காணிஉரிமை சம்பந்தமான பிரச்சனைகள், காணிஅனுமதிப் பத்திரங்கள் வழங்கல், வனவளத்திணைக்களம் தொடர்பான காணிப்பிரச்சினைகளை தீர்த்தல், சிறுதொழில் தொடங்குவது தொடர்பாக அறிவுரை,தனியார் துறையில் தொழில் வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தலும் சுய தொழில் வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தல், வெள்வேறுதுறைகளில் பயிற்சிகள் பெறுவதுதொடர்பாக இளைஞர், யுவதிகளுக்கான அறிவுரைகள் வழங்குதல் போன்ற சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.