அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஆளும் கட்சிக்கு உள்ளேயே சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசியப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சில அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டு எதிர்க்கட்சியுடன் இரகசிய தொடர்புகளைப் பேணி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் இந்த சதித் திட்டத்தில் இணைந்து கொண்டுள்ளதாகவும் அமைச்சரவையில் அங்கம் வகித்துக் கொண்டே ஜனாதிபதியையும் பிரதமரையும் பிழையாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த விடயங்கள் குறித்து அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மூடிய கதவு பேச்சுதவார்த்தை நடத்தியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்களை இலக்கு வைத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.