மும்பை இந்தியன்ஸ் அணி, இந்தியன் பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரைஸின் பூனே சுப்பர் ஜயன்ட்ஸ் அணியை ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுக் கொண்டது.
இதில் குர்னால் பாண்டியா 47 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் உன்டாகட், சம்பா மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரைஸிங் பூனே சுப்பர் ஜயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 128 ஒட்டங்களையே பெற்றுக்கொண்டது.
இதில் அணித் திலைவர் ஸ்மிபத் 51 ஓட்டங்களையும், அஜின்கே ரஹானா 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் மிச்சல் ஜோன்சன் 3 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.